தற்போது கம்போடியா எனும் நாடு சற்று மோசமான நிலையில் இருந்தாலும், அதன் கடந்த கால வரலாறு மகோன்னதம் மிக்கதாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேல் “துன்லே சாப்”எனப்படும் பெரும் ஏரியின் கரையோரங்களில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு மாபெரும் நகரமே இந்த அங்கோர் வாட் ஆகும். “அங்கோர்” என்றால் நகரம் மற்றும் “வாட்” என்பதன் அர்த்தம் விஹாரம் அல்லது கோவில் என்பதாகும். அதாவது கோவில் நகரம் என இதனை கூரலாம். அதன் உச்சநிலையில் அங்கோர் நகரம் சுமார் 10லட்சம் மக்களைக் கொண்டிருந்த ஒரு பெரும் நாகரிகமாக விளங்கியது. ஐரோப்பா கண்டம் நாகரிகத்தின் விடிவெள்ளியைக் கூட எட்டிப் பிடிக்காத நிலையில் கம்போடிய நாட்டில் 10 லட்சம் மக்களைக் கொண்ட ஒரு மாபெரும் நகராக, சிறந்த நீர்ப்பாய்ச்சலும், சாலை போக்குவரத்து வசதிகளும் நிறைந்த ஒரு நகராக அங்கோர் விளங்கியது. இதன் மன்னர்களில்
தலையாய மன்னனாக 7வது ஜெயவர்மன் எனும் ஒரு மன்னன் விளங்கினான். இவன் காலத்தில் அங்கோர் புகழின் உச்சத்தில் இருந்தது. தற்போதைய கெமேர் மொழிக்கான அஸ்திவாரத்தை அமைத்தவன் இந்த அரசனே. இந்த அங்கோர் நகரத்தில் கோவில்கலிலேயே தலைசிறந்ததும் மிகப் பெரியதுமாக அங்கோர் வாட் கோவிலே விளங்கியது. தற்போது அங்கோர் கோவில் ஒரு புத்த கோவிலாக மாறியிருந்தாலும் அது ஒரு விஷ்ணு ஆலயமாகவே ஆரம்பத்தில் கட்டப்பட்டது. அங்கோர் வாட்டில் இன்றும் இந்து தெய்வங்களின் வடிவங்கள் அதன் சுவற்றில்செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அங்கோர் வாட்டிற்கு அருகில் உள்ள அங்கோர் தோம்மில் சிவலிங்க சிலைகள் இன்றும் உள்ளன. இந்த அங்கோர் தோம் நான்கு முகங்களான சிலைகளைக் கொண்ட கோவிலைக் கொண்டது. இந்த நான்கு முக சிலைகள் பிரம்மாவின் உருவங்கள் என ஒரு காலத்தில் எண்ணப்பட்டதுண்டு ஆனால் அவை 7வது ஜெயவர்மனின் உருவங்களே என இப்போது அடையாளங்



